100kW+ திறன் கொண்ட சூரிய ஆலையை உங்க நிறுவனத்தில் அமைப்பதற்கு நிதியளிக்கிறோம்
சூரிய திட்ட ஒருங்கிணைப்பாளராக, எங்கள் பலதுறை அனுபவம் உங்கள் மின் தேவையை புரிந்துகொள்ள உதவுகிறது. இந்த துறையின் நிபுணர்கள் உதவியுடன், யூனிட் மின்சாரத்திற்கு சிறந்த விலையை எங்களால் வழங்க முடியும்.
நாங்கள் உங்கள் விவரங்களை சேகரித்து, சூரிய மின்சக்தி ஆலையை சந்தையை விட குறைந்த விலையில் வடிவமைத்து வழங்குகிறோம். எங்கள் தொழில்நுட்ப தளம் உங்கள் ஆலையை அமைக்க முதலீட்டாளர்களை கண்டறிய உதவுகிறது. உங்கள் ஆற்றல் தேவைகள் நிறைவேறியதா என்பதை உறுதிப்படுத்த குறிப்பிட்ட காலப்பகுதிவரை நாங்கள் உங்களுடன் இணைந்து செயல்படுகிறோம்.
- சூரிய மின்சக்தி ஆலையை அமைப்பதில் நீங்கள் முதலீடு செய்ய தேவையில்லை, எனவே நீங்கள் முக்கிய வணிகத்தில் கவனம் செலுத்தலாம்
- எங்கள் மின் கொள்முதல் ஒப்பந்தங்கள் (Power Purchase Agreements) உங்களுக்கு சந்தையை விட சிறந்த விலையை வழங்கும்
- மின் கொள்முதல் ஒப்பந்தத்தை தொடர விரும்பவில்லையா? உங்கள் வசதிக்கேற்ப ஒப்பந்தத்திலிருந்து வெளியேறலாம்
எளிய வழியில் சூரிய ஆலையை நிறுவுவதற்கான நிதியுதவியைப் பெறுங்கள்
- முதல் கட்டமாக, ஒரு படிவத்தை பூர்த்தி செய்து சில கேள்விகளுக்கு பதிலளிக்குமாறு கேட்கப்படுவீர்கள்
- ஆரம்பத் திரையிடலின் முடிவில், திட்டம் சார்ந்த விவரங்களையும் ஆவணங்களையும் மதிப்பாய்வு செய்வோம். விலை மற்றும் மின் கொள்முதல் ஒப்பந்தத்தை முன்வைக்க இது எங்களுக்கு உதவும்
- மின் கொள்முதல் ஒப்பந்தத்தின் அம்சங்களை நீங்கள் ஒப்புக்கொண்டபின், உங்கள் திட்டத்திற்காக முதலீட்டாளர்களை நாங்கள் அணுகுவோம். முதலீட்டாளரின் ஒப்பந்தத்துடன், உங்கள் சூரிய ஆலையின் கட்டுமானம் உடனடியாகத் தொடங்கும்
நீங்கள் எங்களை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?
- சூரிய உபகரணங்கள், நிறுவல், நிதி, செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பு ஆகியவற்றை நாங்கள் கவனிக்கிறோம்
- உங்கள் மின்சார வழங்குநருடன் பணியாற்றுவதைப் போல நீங்கள் எங்களுடன் எளிதாக பணியாற்றலாம்
- சூரிய ஆலையின் செயல் இயக்க நேரத்தை அதிகரிக்க தொழில்நுட்பத்தில் முதலீடு செய்கிறோம். மற்றும் முதன்மையான முதலீட்டாளர்களை உங்கள் ஆலைக்கு நிதி திரட்ட அணுகுகிறோம்
- எங்கள் அனுபவம், உலகத்தரம் வாய்ந்த உபகரணங்கள் மற்றும் கருவிகளை பயன்படுத்துகிறோம் என்பதை உறுதிசெய்ய உதவுகிறது (மைக்ரோ-கிரிட் நிர்வாகம், தேவை மேலாண்மை மற்றும் தொலைநிலை கண்காணிப்பு அமைப்புகள் இதில் அடங்கும்).
எங்களை தொடர்புகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை பூர்த்தி செய்யவும்.